கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1384- |
இதயக்குடிலில் பாலனை நாம் ஏற்றிப்போற்றி மகிழ்ந்திடுவோம் வாரும் மாந்தரே ஒன்று கூடும் மாந்தரே இறைவன் வந்த திருநாள் இது இதயம் மகிழும் பெருநாள் வாடும் நெஞ்சம் மகிழவே வருகிறார் தேடும் மாந்தர் இதயந்தன்னில் மகிழ்கிறார் ஆராதனை செய்திடுவோம் அவர் பாதம் தொழுதிடுவோம் இல்லம் தோறும் இறைவனை நாம் ஏற்றிப்போற்றி மகிழ்ந்திடுவோம் கடவுள் மண்ணில் மனிதனாக வருகிறார் கருணையோடு உன்னை அணைக்க விரைகிறார் ஆண்டவனை அழைத்திடுவோம் அவரில் நாம் மகிழ்ந்திடுவோம் உள்ளந்தன்னில் உறவாய் நாம் ஏத்திப் போற்றி வாழ்ந்திடுவோம் |