கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1395-ஆண்டவராகிய மெசியா |
ஆண்டவராகிய மெசியா - இன்று உங்களுக்காகப் பிறந்துள்ளார் (2) புதியதோர் பாடல் பாடுங்கள் உலகெங்கும் வாழ்வோரே பாடுங்கள் (2) ஆண்டவரைப் போற்றுங்கள் - அவர் திருப்பெயர் சொல்லி வாழ்த்துங்கள் அவர் தரும் மீட்பை அறிவியுங்கள் நாள்தோறும் எடுத்துச் சொல்லுங்கள் (2) புறவினத்தாருக்கு உரையுங்கள் - அவர் வியத்தகு செயல்களைப் பாடுங்கள் விண்ணுலகம் அக மகிழ்வதாக மண்ணுலகம் களிகூர்வதாக (2) கடலும் அதிலே உள்ளவையும் என்றென்றும் முழங்கி ஆளட்டும் வயல் வெளியும் அதில் உள்ளவையும் காட்டிலே உள்ள மரம் செடியும் (2) ஆண்டவர் திருமுன் களிப்புடனே என்றென்றும் பாடி மகிழட்டும் |