கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1394-ஆயிரம் பிறவிகள் நான் |
ஆயிரம் பிறவிகள் நான் இங்கு எடுத்தாலும் உன்னுறவைச் சுவைத்திட போதாதய்யா என் இயேசுவே என் தெய்வமே ஏழையாய் மண்ணில் வந்தவரே (2) வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2 எளியவர் உள்ளங்கள் உழைத்திடும் வேளை எரிந்திடும் தீபம் நீதானய்யா - என்றும் அழுபவர் குரலில் எழுந்திடும் ஓலம் கேட்டிட எழுவதும் நீதானய்யா - எங்கள் துயரத்தில் ஆறுதல் ஆனவரே சுமைகளைத் தாங்கிட வந்தவரே மனுவாய் பிறந்தனையோ வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2 துணை ஏதுமின்றி வாடிடும் நேரம் அருட்கரம் தருவதும் நீதானய்யா நண்பர்கள் அனைவரும் பிரிந்திடும் போது அருகினில் இருப்பதும் நீதானய்யா - எங்கள் வெறுமையில் உறவாய் இருந்திடுவாய் சிறுமைகள் போக்கிட உதவிடுவாய் துணையாய் வந்திடுவாய் வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2 பசியென்னும் கொடுமை வதைத்திடும் வேளை உணவாக வருவதும் நீதானய்யா - எம்மில் நம்பிக்கை இழந்து நலிந்திடும் வாழ்வில் தும்பிக்கை கொடுப்பதும் நீதானய்யா - எங்கள் படகினில் துடுப்பாய் இருந்திடுவாய் நடுங்கிடும் உள்ளத்தை தேற்றிடுவாய் ஒளியாய் வந்திடுவாய் வா தேவா வா என்னுள்ளம் எழுந்து வா - 2 |