கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1393-ஆயிரம் இரவுகள் வந்தன |
ஆயிரம் இரவுகள் வந்தன போயின அதிலொரு அதிசய இரவு (2) ஆண்டவரின் மகன் ஆடடைக் குடிலில் அவதரிக்கும் இரவு (2) ஒரு இரவு தரும் உறவு இறைமகவு வரும் வரவு (2) வானத்துச் சூரியன் மண்புவி மீது வந்தது ஒரு இரவு (2) வானவன் பூமியில் பேரொளியோடு - 2 வாழ்த்துச் சொன்ன இரவு - ஒரு இரவு... தாய்மடி சுகத்தை இறைவனும் அறிய சேயாய் மலர்ந்த இரவு (2) தாய்மையின் நிலையை இறையவன் அருளில் - 2 கன்னியும் கண்ட இரவு - ஒரு இரவு... மானுட மீட்பின் மகத்துவம் காண மாபரன் பிறந்த இரவு (2) மண்ணும் எந்த மனிதரும் என்றும் - 2 மறக்க முடியா இரவு - ஒரு இரவு... |