Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1392-ஆலய மணிகளே ஒலித்திடுங்கள்  
ஆலய மணிகளே ஒலித்திடுங்கள்
ஆண்டவர் பிறப்பை அறிவியுங்கள்
ஆலய கதவுகள் திறந்திடுங்கள்
மீட்பர் வந்திட வழிவிடுங்கள் (2)

உலக மக்களே வந்திடுங்கள்
உண்மை இறைவனை வணங்கிடுங்கள்
மலர்கள் பலவும் கொணர்ந்திடுங்கள்
மன்னன் பதமே தூவிடுங்;கள் - எங்கள் - 2

இன்னிசை கருவிகள் மீட்டிடுங்கள்
இறைவனின் பிறப்பை முழங்கிடுங்கள்
பண்ணிசைப்பாடி மகிழ்ந்திடுங்கள்
பாலன் இயேசுவை வாழ்த்திடுங்கள் - எங்கள் - 2

இதயத் தூய்மை அடைந்திடவே
இணையில்லா இன்பம் நிலவிடவே
இதயக் கதவினைத் திறந்திடுங்கள்
இயேசு வந்திட வழிவிடுங்கள் - எங்கள் - 2

 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா