கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1390-ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது |
ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம் மனிதனில் சந்தோசம் பொங்கிடுது இறைபிறப்பின் காலம் - அந்த தேவன் வருகையில் - இந்த பூமி மகிழுது ஒளியேற்றும் இதயத்தில் - தெய்வகானம் கேட்குது கருணையின் காலமிது தலைமகன் யேசு பிறந்திடும் காலம் இதயத்தை நாமும் அலங்கரிப்போம் மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வை சமன் செய்ய இன்றே முனைந்திடுவோம் கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுகமேயில்லை இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமையில்லை தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம் பிறப்பைக் காணுவோம் ஒரு பிள்ளை குடும்பத்தில் பிறக்கின்றபோது எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு தாயும் சேயும் நலமாய் வாழ வகை வகையாக உபசரிப்பு மாடுகள் அடையும் தொழுவில் மன்னன் பிறக்கும் அரண்மனை எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை மன்னனின் அன்பு உறவுகள் உள்ளத்தைத் திறந்தே உபசரித்திடுவோம் போற்றி வாழுவோம் |