கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1389-ஆண்டவர் சந்நிதி வாருங்களே |
ஆண்டவர் சந்நிதி வாருங்களே - நல் ஆனந்தமுடனே பாடுங்களே 2 யேசுவின் பிறப்பில் மகிழுங்களே - (2) இந்த இகமதில் நாளும் முழங்குங்களே வாருங்களே வாருங்களே (2) உள்ளங்கள் மகிழும் உறவுகள் மலரும் இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால் அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால் ஆண்டவர் வழியினில் நடந்திடலாம் குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால் யேசுவை அவரில் கண்டிடலாம் 2 இறைபணி தொடர இறையாட்சி மலர இணைந்திடுவோம் நாம் இறைவனிலே 2 பிரிவுகள் இல்லை பேதங்கள் இல்லை இறைவன் யேசு வருகையிலே நீதியும் உண்டு சமத்துவம் உண்டு இறைவன் வாழும் சமூகத்திலே அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால் 2 இனிய உலகம் படைத்திடலாம் குழந்தை யேசு உள்ளத்தில் பிறந்தால் 2 புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம் |