கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1388-ஆண்டவர் அருள் தரும் நாளில் |
ஆண்டவர் அருள் தரும் நாளில் -ஆனந்தம் பொங்கிடும் வாழ்வில் நேற்றும் இன்றும் என்றும் பாடு - இயேசுக்கிறீஸ்து நம்மோடு நேற்றும் இன்றும் என்றும் பாடு - இயேசுக்கிறீஸ்து நம்மோடு பாடுவோம் பாடுவோம் மீட்பின் நற்செய்தியை பகிர்வோம் பகிர்வோம் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் விண்ணில் உறைந்த வாக்காய் திகழ்ந்த கடவுள் நம்மோடு இந்த மண்ணில் உருவோடு வந்த அன்பின் நாளிது வாருங்கள் கொண்டாடுவோம் - இன்று எல்லோரும் பண்பாடுவோம் இறைவன் பேரன்பில் ஒன்றாகுவோம் - இந்த உண்மைக்குச் சான்றாகுவோம் பாடுவோம் பாடுவோம் மீட்பின் நற்செய்தியை பகிர்வோம் பகிர்வோம் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் ஊற்றும் உயிரும் உறவும் ஆன உலகின் நம்மீட்பர் நம்மோடு இருக்கும்வரை இதற்கீடிணை ஏதுமில்லை பழையன அழித்துவிட்டார் - நம்மில் புதியன படைத்து விட்டார் கடவுள் அரசினை மலரச்செய்தார் - மகிழ்ந்து எக்காளம் முழங்கிடுவோம் பாடுவோம் பாடுவோம் மீட்பின் நற்செய்தியை பகிர்வோம் பகிர்வோம் கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் |