Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1387-ஆர்ப்பரிப்போம்  
ஆர்ப்பரிப்போம் இந்நன்நாளில்
கிறீஸ்து யேசு ஜெனித்ததால்
விண் மண்ணோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே

ஆர்ப்பரிப்போம் இந்நன்நாளிலே
நம்மீட்பர் ஜெனித்ததால் - வான்
பூமியும் சிருஸ்டிகளும்
என்றென்றும் போற்றிடவே என்றென்றும் போற்றிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடவே

உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும் - மனிதர்
மீதன்பு நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜெனித்தார்
நம் மீட்பர் ஜெனித்தார்
நம் மீட்பர் யேசு ஜெனித்தார்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா