கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1385-அன்பின் அமுதமே |
அன்பின் அமுதமே அருளின் அருவியே இயேசு தெய்வமே இதயம் வாருமே உலகின் ஒளியே வா உள்ளக் குடிலில் வா வார்த்தை உருவில் வா வாழ்வின் நிறைவே வா அன்பெனும் தீபம் ஏந்தி அருளென்னும் ஒளியை ஏற்றி (2) அவனியில் உதித்த மன்னவா - உன் அன்பினை நான் பாடவா உன்னைத் தேடும் இதயக் கோயில் அருளால் நிறைந்திட வா (2) விண்ணோர் போற்றும் ஒளியே மண்ணோர் வாழ்த்தும் நிலவே (2) உலகெலாம் இன்பக் கோலம் - எம் உள்ளங்கள் நீ தேடும் காலம் உன்னைப் பாடும் நேரம் உயிரின் உயிராய் இணைந்திட வா (2) |