கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | பெத்தலையில் பிறந்தவரைப் |
பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே - இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் (2)- இங்கு தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனும் தொட்டிலிலே ஆரீரோ ஆரீரோ ஆரீராரே ஆராரோ ஆராரோ ஆரீராரே தூங்கு தூங்கு பாலா நீ - தூங்கு தூங்கு பாலா நீ சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு பங்கமுற்ற பசுந்தொட்டிலில் படுத்திருக்கிறார் இவ்வளவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம் எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே |