Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் ஆயிரம் துதிப்பாடல்  

ஆயிரம் துதிப்பாடல் எந்தன் நாவினில் அசைந்தாடும்
ஆனந்தம் ஆனந்தம் என் மனதில்
ஆண்டவா உனைப் பாட - 2

வான் முகிலும் உயர் மலையும் உந்தன் புகழ் பாட
தேன் பொழியும் நறு மலர்கள் உந்தன் பெயர் பாட
வான் பொழியும் நீர்த்துளிகள் உந்தன் அருள் பாட
யான் உனது திருப்புகழை
கவியால் தினம் பாட - ஆண்டவா

பகல் ஒளியும் பால் நிலவும் ஒளியாம் உனைப்பாட
அலை கடலும் அதன் சிறப்பும் கருணையின் விதம் பாட
மழலைகளின் தேன் மொழிகள் தூய்மையின் நிறம் பாட
யான் உனது திருப்புகழை
கவியால் தினம் பாட - ஆண்டவா



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!