Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் நற்கருணை நாதரே என்  

நற்கருணை நாதரே என் துணையாக வாருமே -2
மாறாத பாசம் வைத்தேன் இவ்வேளை
துணையாக வாருமே 2
மனம் திறந்து பேச மறுரூபமாகிட துணையாக வாருமே

கனிந்துருகும் அன்பில் கரையேற்றம் பெறவே
துணையாக வாருமே துணையாக வாருமே
கருணை கொண்டு என் கதியே என்னோடு
துணையாக வாருமே துணையாக வாருமே

எனதிந்த நிலையில் என்னோடு நடக்க
துணையாக வாருமே துணையாக வாருமே
எண்ணில்லா வரங்கள் என்னில் வழங்கிட
துணையாக வாருமே துணையாக வாருமே

உடைந்தெந்தன் உள்ளம் உயிரூட்டம் பெறவே
துணையாக வாருமே துணையாக வாருமே
ஊனுடல் உம்மாலே உணவூட்டம் பெறவே
துணையாக வாருமே துணையாக வாருமே

அலைபாயும் நெஞ்சம் அது தேடும் தஞ்சம்
துணையாக வாருமே துணையாக வாருமே
ஆத்மாவின் ராகம் அது உந்தன் பாதம்
துணையாக வாருமே துணையாக வாருமே



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!