Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் அப்பா தந்தையே...  


அப்பா தந்தையே... உம்மை ஆராதிக்கின்றேன்
அன்பான தந்தையே தந்தையே ....
நித்திய தந்தையே ....
வாழும் தந்தையே....
நீதியுள்ள தந்தையே....
முடிவின் தந்தையே....
இரக்கத்தின் தந்தையே...
மாட்சிமிகு தந்தையே...
அமைதியின் தந்தையே...
மறைவாயுள்ள தந்தையே...
எல்லோர்க்கும் ஏக தந்தையே...
நீதி அருள்கின்ற தந்தையே...
இஸ்ரயேலின் தந்தையே...
நேர்மையாளரின் தந்தையே...

எல்லா உயிர்களின் தந்தையே...
என்னைப் படைத்த தந்தையே...

இயேசுக்கிறீஸ்துவின் தந்தையே...
என்னை ஆட்கொண்ட தந்தையே...
முதலும் முடிவுமான தந்தையே...
வாக்குத் தத்தங்களின் தந்தையே...
விண்ணுக்கும் மண்ணுக்கும் தந்தையே...
இஸ்ரயேலைப் படைத்த தந்தையே...
எனக்கு வெற்றியளிக்கும் தந்தையே...
என் மீது அக்கறையுள்ள தந்தையே...
இறுதிவரை வழிநடத்தும் தந்தையே...
இஸ்ரவேலின் ஆயரான தந்தையே...
மாண்பு மிக்க தந்தையே...
உள்ளத்தில் உறைகின்ற தந்தையே...
என்னை நிலை நிறுத்திய தந்தையே
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையே
எல்லா மாட்சிக்கும் உரிய தந்தையே
வல்லமை மிகுந்த தந்தையே


எனக்காக பரிந்து பேசும் தந்தையே
எங்கள் மீட்பின் பாறையான தந்தையே
எங்களுக்காக உம் மகனை அனுப்பிய தந்தையே
மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் தந்தையே
மறைபொருளாய் இருக்கின்ற தந்தையே
எங்கள் அருகில் இருக்கும் தந்தையே
வாழ்நாளை ஆசீர்வதிக்கும் தந்தையே
ஜெருசலேமை உறைவிடமாகக் கொண்ட தந்தையே
வியத்தகு ஆலோசகரான தந்தையே
சாத்தானின் தலையை நசுக்கும் தந்தையே
அறிவு ஆற்றல் திட்டமிடுகின்ற தந்தையே
வாக்குறுதிகளின்படி ஆசி வழங்கிய தந்தையே
எங்களைத் தூய்மைப்படுத்தும் தந்தையே
ஆற்றல் மிக்கவராய் இருக்கும் தந்தையே
எளிய மனத்தோரைக் காக்கும் தந்தையே
என்றும் எங்களோடு இருக்கும் தந்தையே

மாட்சியுடன் வெற்றி பெறும் தந்தையே
மறைவாய் உள்ளதைக் காணும் தந்தையே
எக்காலத்துக்கும் அரசராய் இருக்கிற தந்தையே
உடன்படிக்கையைக் காப்பாற்றும் தந்தையே
நேற்றும் இன்றும் என்றும்மாறா தந்தையே
நம்பிக்கையால் உலகை நிறுத்தும் தந்தையே
படைப்புகளுக்குத் தொடக்கமான தந்தையே
இருக்கின்றவரும் இருந்தவருமான தந்தையே









 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!