Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் இயேசு நேசிக்கிறார்  
இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பர்ப்பேன் இயேசு

5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் இயேசு


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!