நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | உம் பாதம் அமர்ந்தேன் |
உம் பாதம் அமர்ந்தேன் என் இயேசுவே உன் திருமுக தரிசனம் நான் காணவே ஆராதனை உமக்கு ஆராதனை ஆண்டவா உமக்கே ஆராதனை மாறாத பேரன்பின் திருவுருவே தெய்வீக அருளின் பிரசன்னமே ஆராதனை உமக்கு ஆராதனை ஆண்டவா உமக்கே ஆராதனை கல்வாரி மலை மீது கரம் விரித்தது என்னை மீட்ட தியாகத்தின் வசந்தமே ஆராதனை உமக்கு ஆராதனை ஆண்டவா உமக்கே ஆராதனை தாபோர் மலைமீது வெண்பனி போல ஜொலிக்கின்ற மகிமையின் பிரசன்னமே ஆராதனை உமக்கு ஆராதனை ஆண்டவா உமக்கே ஆராதனை |