Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா  

இறைவா இறைவா இறைவா இறைவா ஆ
உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா
உமதன்பு படைப்புகளை நேசிக்கின்றேன் இறைவா
உம் கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா
உம் முகத்தை படைப்பினிலே காணுகின்றேன் இறைவா
இறைவா இறைவா உயிரான இறைவா
உடன் வாழும் இறைவா

வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா
கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா
அதிகாலைப் பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா
அழகுமலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா
உம் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய்
உம் பதம் பணிகின்றேன் ஒளிவிளக்காகிறாய்
அழகிய என் உலகை அணைத்துக் காத்திடவே
அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய்

கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா
தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா
நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா
வான்பொழியும் மழைப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா
இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகிறேன்
இறையுன் படைப்போடு ஒன்றாய் பாடுவேன்
எல்லா உயிர்களுமே என்றும் வாழ்ந்திடணும்
எல்லா மாந்தருமே மகிழ்வைக் கண்டிடணும்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!