Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள்    
துன்ப வேளையில் என்னைக் கூப்பிடு
நான் உனக்கு செவி சாய்ப்பேன்
என்று சொன்ன இயேசுவே
துன்பத்தாலும் வேதனையாலும்
என் மனம் வாடும் போது உம்மை நோக்கி
என் முகத்தைத் திருப்ப வரம் தருவாயா

துன்ப வேளையில் என்னைக் கூப்பிடு
உனக்கு நான் பதில் தருவேன்

துன்ப வேளையில் என்னைக் கூப்பிடென்று
அன்பாய்ச் சொன்னவரே
என் துன்பங்கள் நீக்க வாருமே வாருமே வாருமே

என்னைப் பாருமே என் குரல் கேளுமே
பதம் சேரவே உம்மில் வாழவே

சிதறுண்ட மனதோடு வருந்தி நிக்கிறேனப்பா
பாரத்தால் தடுக்கி விழுந்து கலங்கி ஏங்குறேன்ப்பா
நீங்க வாருங்கப்பா
என்னையும் தூக்கி விடுங்கப்பா
அள்ளிக் கொள்ளுங்கப்பா
உங்க மார்பில் என்னையும் போடுங்கப்பா
நீங்க போதும் எனக்குப்போதும்
இன்பத்தில் போதும் துன்பத்தில் போதும்
இன்றைக்கும் போதும் என்றைக்கும் போதும்
என்றுமே நீங்க போதும்

பலவித எண்ணங்களால் குழம்பி நிக்கிறேன்ப்பா
ஒதுக்கிய வெறுங்கல்லாய் ஒதுங்கிப் போகிறேன்ப்பா
நீங்க வாருங்கப்பா
என் மனப் பாரத்தைப் போக்குங்கப்பா
சேர்த்துக் கொள்ளுங்கப்பா
உம் இல்ல அன்பின் கருவியாய்
நீங்க போதும் எனக்குப்போதும்
விண்ணிலும்போதும் மண்ணிலும் போதும்
வாழ்விலும் போதும் சாவிலும் போதும்
என்றுமே நீங்க போதுமே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!