நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | தெய்வீக மாளிகையில் |
தெய்வீக மாளிகையில் ராஜா உன்னை நான் காண காத்துக் கிடக்கின்றேன் உன் தரிசனம் எப்போதையா உன் தரிசனம் எப்போதையா தரிசனம் தாராய் தரிசனம் தாராய் இயேசு ராஜாவே (2) உன் முகம் நான் காண உம் குரல் நான் கேட்க (2) உம் அன்பை நான் சுவைக்க ஆர்வமாய்க் காத்திருப்பேன் (2) ஆர்வமாய்க் காத்திருப்பேன் தரிசனம் தாராய் தரிசனம் தாராய் இயேசு ராஜாவே (2) உமது மன நிலையில் நானும் அறிந்திடணும் (2) உம் இதய துடிப்புக்களை மகிழ்ந்தங்கு நான் கேட்கணும் (2) மகிழ்ந்தங்கு நான் கேட்கணும் தரிசனம் தாராய் தரிசனம் தாராய் இயேசு ராஜாவே (2) தாபோர் மலை நோக்கி உன்னோடு நான் வரணும் (2) மறுரூபமாகவேனும் உன் மகிமையை நான் காணணும் (2) உன் மகிமையை நான் காணணும் தரிசனம் தாராய் தரிசனம் தாராய் இயேசு ராஜாவே (2) |