Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள்    
தாலாட்டும் தாய் நீயல்லோ
கண்ணில் நீரோடு தேடும் பிள்ளை நான்

கருவிலிருந்தேன் என்னைச்சுமந்தாய்
கருவிழிபோலென இதுவரை காத்தாய்
இறையே கனியே அனுதினம் இருளில்
பாரம் சுமந்து வாடும் என்னை

வாழ்வு எல்லாம் தேடல் தானே
உனைத்தேடும் என் வாழ்வு வீணில் கரைந்திடுமோ
தேடித் தேடிச் சோர்ந்தாலும் தேடல் தொடர்ந்திடுவேன்
என் தேவன் நீயின்றி மகிழ்வேது இறைவா

காலம் எல்லாம் காத்திருந்தாய்
உனைவிட்டுச் சென்றாலும் நீரே கதியானாய்
கால்கள் போகும் திசையெல்லாம் பாதை நீ தந்தாய்
உன்னைச் சேரும் பொழுதெல்லாம் திருநாளே இறைவா

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!