Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் நீங்க மட்டும் இல்லாதிருந்தா  
நீங்க மட்டும் இல்லாதிருந்தா என்
துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்
உங்க வார்த்தை மட்டும் தேற்றதிருந்தா
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன்
இயேசையா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே

தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது
மூழ்காமல் காத்ததும் உம் கிருபையப்பா
அக்கினியில் நடந்த போது கடும்
என்னை மீட்டதும் கிருபையப்பா


நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்ததும் கிருபையப்பா
விக்கினங்கள் சூழ்ந்த போது மரண
என்னை மீட்டதும் கிருபையப்பா

அன்னையின் கருவிலே தெரிந்து கொண்டு
இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா
வழிதப்பி நடந்தபோது - உந்தன்
மீட்டு ரட்சித்ததும் கிருபையப்பா



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!