Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் நீங்க இல்லாம  
நீங்க இல்லாம
வாழ முடியாதையா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதையா - 2
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துனையாளரே

காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்

தருகின்ற நல்ல தெய்வமே - 2
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும்
வெறுப்பதில்லையே - 2
நன்றி சொல்லி துதிபாடி
மனதார தொழுகிறோம்


இதுவரை நிற்பதும்
இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபைதான் - 2
பெருமை பராட்டிட ஒன்றுமில்லையே
தாங்கி நடத்துவது உங்க கிருபையே - 2
நன்றி சொல்லி துதிபாடி
மனதார தொழுகிறோம்



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!