நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | நற்கருணையிலே எழுபவரே |
நற்கருணையிலே எழுபவரே ஆராதனை புரிவோம் எம் அருகினிலே வருபவரே ஆராதனை புரிவோம் வருக வருகவென்று அழைக்கும் மனதில் வந்து அமர்ந்து அமர்ந்து அன்பைப் பொழிபவரே நினைவு முழுதும் அன்பில் நனைந்து நனைந்து உம்மில் முழுதும் இணைந்திருக்க அழைப்பவரே உமது அருகில் இருந்தால் கவலை மனதில் இல்லையே உமது உறவில் இருந்தால் மனது மகிழ்வில் துள்ளுதே உருகி உருகி நிதம் உனக்கென எரிந்திடும் மெழுகுதிரிகள் என ஒளிர்ந்திடுவோம் மலர்ந்து மலர்ந்து உந்தன் பதத்தில் இணைந்திருந்து மணக்கும் மலர்களென அலங்கரிப்போம் உமது சீடரெனவே உம் பாதச் சுவட்டில் நடப்போம் உமது அன்பின் கனலை உலகம் முழுதும் நிறைப்போம் |