நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | நலம் தரும் மருத்துவரே |
நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே - 2 ஒரு சொல் போதுமையா நான் குணமாக வேண்டுமையா - 2 ஒரு வார்த்தை சொல்லும் நான் குணம் பெறுவேன் - 2 பல வருடங்களாய் படுக்கையில் கிடந்தார் பரிவு கொண்டீர் அவர் நடந்து சென்றார் - 2 இது அதிசயம் இது அற்புதம் உம் ஆற்றலால் ஆகுமே - 2 ஒரு வார்த்தை சொல்லும் நான் குணம் பெறுவேன் - 2 தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடனின் குரல் கேட்டீர் - 2 ஐயா ஒளி தந்து சுகமளித்தீர் அவர் ஊரெல்லாம் உம்மை புகழ்ந்தார் - 2 ஒரு வார்த்தை சொல்லும் நான் குணம் பெறுவேன் |