Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் மறவாமல் நினைத்தீரையா  
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ. ஆ.
கோடி கோடி நன்றி ஐயா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்


பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே

குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!