Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் மனமிரங்கும் மனமிரங்கும்  
மனமிரங்கும் மனமிரங்கும் - உம்
மக்கள் மீது மனமிரங்கும்
உம் மீது நம்பிக்கை வைக்கின்றேன்
உம்மாலே எல்லாம் கூடுமே
வல்லவரே நல்லவரே என்னைக் காப்பீரே

துன்பவேளை நான் கண்ணீர் சிந்தி - என்
இருகரம் விரித்துன்னை அழைத்தேன்
என் குரல் கேட்டீர் நீர் செவி சாய்த்தீர்
இவை எல்லாம் உம்மால் கூடுமே
வல்லவரே நல்லவரே என்னைக் காப்பீரே

இந்தவேளை என் நோய்கள் தீர - உம்
திருக்கரம் விரித்தாசீர் அருளும்
என்னைக் குணமாக்கி நீர் சுகம் தந்தீர்
இவை எல்லாம் உம்மால் கூடுமே
வல்லவரே நல்லவரே என்னைக் காப்பீரே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!