Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் என் கூடவே இரும்  

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது - 2

இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2


கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2


வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!