நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | என் இறைவா உமையே |
என் இறைவா இறைவா உமையே நாடுகிறேன் (2) என் இறைவா உமையே நாடுகிறேன் (2) உம்மீது என் உயிர் தாகம் கொண்டுள்ளது நீரின்றி வரண்ட தரிசுநிலம் போல என் உயிர் உமக்காக ஏங்குகின்றது உம் ஆற்றல் மாட்சி காண விழைந்து -( நம்தன நம்தன நம்தன தநனனன) உம் தூயகம் வந்து உம்மை நோக்குவேன்-(நம்தன நம்தன நம்தன தநனனன) உம் பேரன்பு உயிரினும் மேலானது என் நாவும் உமைப் புகழும் என் வாழ்வில் உம்மைப் போற்றுவேன் என் கரம் குவித்தே உம் பெயர் ஏத்திடுவேன் தின தன்தா தினதந்தா தினதந்தன தனனனன என் ஆருயிர் உம்மில் நிறைவு காணவே( நம்தன நம்தன நம்தன தநனனன) என் உள்ளம் மகிழ்ந்து உம்மைப் பாடுவேன் (நம்தன நம்தன நம்தன தநனனன) என் உறக்கத்தில் விழித்து நிற்கும் உம்மை நினைப்பேன் உம் துணையும் தினம் கிடைக்கும் உம் அருளால் அன்பால் வாழ்வேன் உம் கரம் பற்றி நாளும் வழி நடப்பேன் |