நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | என் இதயம் யாருக்கு |
என் இதயம் யாருக்குத் தெரியும் என் வேதனை யாருக்குப் புரியம் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னதை தேற்றக் கூடும் - 2 நெஞ்சின் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் - 2 தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - 2 சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ - 2 வீசும் புயலிலே படகும் தப்புமோ - 2 மங்கி எரியும் விளக்கு பெரும் காற்றில் நிலைக்குமோ - 2 உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ 2 அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ - 2 இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமோ 2 என் இதயம் இயேசுவுக்குத் தெரியும் என் வேதனை இயேசுவுக்குப் புரியும் என் தனிமை என் சோர்வுகள் இயேசு தேற்றுவார் |