Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் ஆராதனை நாயகன் நீரே  
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே - 2
ஆயள் முடியும் வரை
உம்மைத் தொழுதிடுவேன் - 2

ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன்

மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே

முடிவில்லா ராட்சியம் அருள
திரும்பவும் வருவேனென்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!