Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் அப்பா உங்க மடியில நான்  
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர் வாழணும் 2

என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா 2

என் உசுருக்குள்ள கலந்து
உயிர் வாழ்வது ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்து வந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ என் 2

உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்து கிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணி அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்து வந்ததும் ஏனோ என்ன 2

பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு நான் 2



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!