நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1252-வாழ்க சர்வேசுரன் வாழ்க |
வாழ்க சர்வேசுரன் வாழ்க பரிசுத்தம் நிறைந்த அவர் பெயரே வாழ்க மெய்யான தேவ மனிதனாய்த் துலங்கும் நம் இயேசுபரன் வாழ்க இயேசுநாமம் வாழ்க அவர் தூய நேச இருதயமே வாழ்க இயேசுபரன் அன்பின் அனுமானமாய் தேவ நற்கருணையிலே வாழ்க நம் இயேசு தம் அளவற்ற அன்பினால் சிந்திய திரு இரத்தம் வாழ்க என்றும் எமைத் தேற்றிடும் இறைவனாம் தூய ஆவியுமே வாழ்க நம் தேவனின் தாயாய் விளங்கிடும் பரிசுத்த மரியாளும் வாழ்க அவளது அமலோற்பவமுமவள் கன்னித்தாய் எனும் பெயரும் வாழ்க அவளது மகிமை ஆரோபணமும் அவர் பத்தா சூசை வாழ்க வாழ்க சர்வேசுரன் வானிலுறைவோரிடம் வாழிய வாழியவே |