Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1248-தேவ குமாரனைத் துதித்திடுவோம்  
தேவ குமாரனைத் துதித்திடுவோம்
பாவ சங்காரனைப் பணிந்திடுவோம்
சீவனைத்தந்த யேசு என்னும் திவ்விய
ஆயனைப் போற்றி வணங்கிடுவோமே

ஆதிபரன் திருச்சுதன் அவரே
மாதவ மாமரி மகன் அவரே
மானிலம் வென்ற மீட்பவரே
அலகை ஒடுக்கிய ஆண்டவரே

அன்பினில் நம்மை அணைத்தவரே
அன்பின் பெருக்கால் வந்தவரே
துன்பத்தில் ஆழ்ந்து நொந்தவளே
இன்பம் எனக்கு அருள்பவரே


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!