நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1246-வாருங்கள் புகழ்ந்திடுவோம் |
வாருங்கள் புகழ்ந்திடுவோம் தேவாதி தேவனை வணங்கிப் போற்றிடுவோம் ராஜாதி ராஜனை கைகளை உயர்த்திடுவோம் சிரசினைத் தாழ்த்தி பணிந்து வாழ்த்திடுவோம் இயேசு கிறிஸ்துவை (2) வாழ்வையும் வளத்தையும் கொடுத்ததற்கு வேந்தனை வணங்கிடுவோம் (2) நன்றி உணர்வையும் கொடுப்பதற்கு இறைவனை வேண்டிடுவோம் (2) துன்பமும் துயரமும் வெல்வதற்கு தேவனைப் புகழ்ந்திடுவோம் (2) பாவத்திலிருந்து மீட்படைய இறைவனைப் போற்றிடுவோம் (2) ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா (2) |