Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1242-கொஞ்ச நேரம் கேளாயோ  
கொஞ்ச நேரம் கேளாயோ - என்
வாழ்வின் கதைகளை இயேசையா (2)
பலவீனமான பாவி நான்
கடைக்கண் திறந்து பாருமையா
ஒரு தந்தையைப் போல் என்னை மன்னித்திடு
வாழ்விலே என்னை நடத்தி விடு
நீரே எனக்கு சரணமையா
நீரே எனக்கு அபயமையா
எந்தன் வாழ்வில் துணையுமையா
எனக்கு நீரே அனைத்துமையா (2)

மனதிலே வேதனை வரும் போது
அன்புடன் என்னை அணைத்து விடு (2)
நெஞ்சிலே தோன்றும் கவலையெல்லாம்
ஆறுதல் மொழியால் அகற்றி விடு (2)
நீரே எனக்கு சரணமையா....

தனிமையில் வாடிடும் என் நிலையை
தயவுடன் இரங்கி பார்த்து விடு (2)
கண்ணீரைத் துடைத்து மகிழ்வளிக்க
உன் திருப்பார்வையைப் பதித்து விடு (2)
நீரே எனக்கு சரணமையா....

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!