நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1241-நம்பு நம்பு மனமே |
நம்பு நம்பு மனமே நம்பினாலே சுகமே யேசுவாலே ஆகாதது ஒன்றுமில்லையே 2 ஒரு வார்த்தை சொன்னாலே போதும் - ஐயா என் மகன் குணமடைவான் - என்ற நம்பிக்கை யேசுவைத் தொட்டதே நூற்றுவர் மகன் குணமானான் - அந்த நம்பிக்கை யேசுவைத் தொட்டதே நூற்றுவர் மகன் குணமானான் பெரும்பாடு நோய் நீங்கவே அவர் அவர் ஆடையைத் தொட்டால் போதும் - என்று யேசுவின் ஆடையைத் தொட்டவள் நம்பியே குணமடைந்தாளே - இறை யேசுவின் ஆடையைத் தொட்டவள் நம்பியே குணமடைந்தாளே என் நோயை குணமாக்கிட உம்மால் முடியும் நம்புகிறேன் - என்ற விசுவாசி இயேசுவின் அருளால் தொழுநோய் நீங்கப் பெற்றானே அந்த விசுவாசி இயேசுவின் அருளால் தொழுநோய் நீங்கப் பெற்றானே |