நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1240-குணமளிப்பார் இயேசு |
குணமளிப்பார் இயேசு - உனக்கு குணமளிப்பார் இயேசு - நிச்சயம் குணமளிப்பார் இயேசு - உன் பாவங்களிலிருந்தும் - உன் நோய்களிலிருந்தும் - உன் கவலையிலிருந்தும் - உன் கண்ணீரிலிருந்தும் - (குணமளிப்பார் இயேசு) வரண்ட நிலத்தைக் கண்டு அவரும் தண்ணீர் ஊற்றுவார் இருண்ட மனதைத் தேற்ற அவரும் ஒளியை வீசுவார் - 2 எதையும் நினைத்து கலங்காதே நோயை நினைத்து உருகாதே - 2 உன்னைத் தெரிந்த இறைவன் உன்னை நிட்சயம் காப்பாரே - 2 பள்ளத்தாக்கில் நடக்கும்போதும் பக்கம் வந்திடுவார் - 2 அபயக்குரலைக் கேட்கும்போதும் உதவி தந்திடுவார் - 2 (குணமளிப்பார் இயேசு) ஏக்கம் பலவும் சூழும்போது எழுந்து வந்திடுவார் - 2 துயரம் நம்மை அழுத்தும்போது துணையாய் நின்றிடுவார் (எதையும் நினைத்து) கடன்கள் தொல்லை தாக்கும்போது உடன் இருந்திடுவார் - 2 முடிந்துபோன நிலையைக்கூட முறித்து மாற்றுவார் - 2 (எதையும் நினைத்து) |