Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1238-சக்தியானவா ஜீவநாயகா  
சக்தியானவா ஜீவநாயகா - 2
அன்பாலே வாழும் தேவா - 2
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா

மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்க வா - 2
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்க வா - 2
திக்கனைத்துமே உம்மை எதிரொலிக்க வா - 2
யுத்தம் நீங்கியே அமைதி உதிக்கச் செய்ய வா - 2
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா

வறுமை போக்கியே வழமை மகிழ்வளிக்க வா 2
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்த வா - 2
ஆணவத்தையே வென்று பணிவை ஆக்க வா - 2
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா - 2
நீதி நேர்மையில் எம்மை நாளும் ஆளவே
அன்பாலே வாழும் தேவா



 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!