நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1237-ஒரு நிமிடம் உன் அருகினில் |
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவாயோ என் இறைவா அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும் அறியாயோ என் தலைவா ஆ.......... விழிகளை மூடி உனை நினைக்கையிலே விந்தைகள் நிகழ்வதும் ஏன் இறைவா மொழியினைத் தாண்டி மனம் உறவாட மகிழ்வினில் மிதப்பதும் ஏன் இறைவா அளவில்லாத உன் அன்பினை நினைக்க அழுகை வருவதன் நியாயமென்ன தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற சுமைகள் கரைந்திடும் மாயமென்ன சோதரர் மானிடர் அழுகுரல் கேட்க கேள்விகள் நிறைவதும் ஏன் இறைவா வேதனை கண்டும் நீ காத்திடும் மௌனம் விளங்கவில்லை அது ஏன் இறைவா |