நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1235-என்னை நீ நேசிக்க |
என்னை நீ நேசிக்க என்னிடம் இருப்பது என்னவென் றெனக்கு கூறிடுவாய் இயேசுவே எனக்கு கூறிடுவாய் சேயிடம் எத்தனை குறையிருந்தாலும் தாயதை அன்பு செய்வதும் ஏனோ பேயெனக் கடலில் துயர் வந்தாலும் தூய ஆறதில் பாய்வதும் ஏனோ எத்தனை குறைகள் எனக்கு இயேசுவே அத்தனை பொறுத்து அன்பு செய்தாயே நீரினில் எத்தனை சேறிருந்தாலும் தாமரை அங்கு மலர்வதும் ஏனோ பாரினில் இத்தனை பாவிகள் இருக்க கார்மழை அங்கு பொழிவதும் ஏனோ அருளுக்கு அருகதை இல்லேன் எனினும் அருளால் என்னை நீ ஆட்கொண்டனையே |