நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1233-என் வெறுமையைப் பார் |
என் வெறுமையைப் பார் இறைவா உன் முழுமையைத் தா இறைவா வழியென எதையும் பார்த்தில்லை - நான் வாழ்வென எதையும் உணர்ந்ததுமில்லை நிலையென எதையும் பிடித்ததுமில்லை சதியென இறையை நினைத்ததுமில்லை உயிரென இறைவனை எண்ணியதில்லை உயர்வென அன்பினை தேடியதில்லை இருளென ஓரமாய் விலகியதில்லை அருளென யேசுவுள் சென்றதுமில்லை பழியென எதையும் அகற்றியதில்லை - நான் பாவங்களென்று தூற்றியதில்லை அழிவென உலகை ஒதுக்கியதில்லை இழிவென தீமையை வெறுத்ததுமில்லை |