நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1232-என்னிடம் எழுந்த யேசுவே |
என்னிடம் எழுந்த யேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியும் என்றும் - 2 பரலோக வாசிகள் அருமையாய் உம்மை புகழ்ந்து கொண்டாடிடப் புவியிலே இந்த - 2 நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ நேசர் உன் அதிசய இரக்கமும் அல்லோ மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து நேசமாய் என்னில் எழுந்து வந்தீரென - 2 ஆசையாய் யேசுவே விசுவசித்து உமக்குப் பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேன் |