நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1231-என் இதயகானம் கேட்கிறதா |
என் இதயகானம் கேட்கிறதா - நீ இருப்பது அதில் தெரிகிறதா உனக்காகத் துடிக்கும் உள்ளம் ஒருகோடி கவிதைகள் சொல்லும் உன்னருகில் நானிருக்க. ஒருகோடி யுகங்கள் வேண்டும். என்னோடு நீ பேச எழுந்தென்னில் வாருமையா யேசு தேவா.வாருமையா..(2) ஊதாரி மைந்தன் நான் உன்னுறவைத் தேடினேன் - 2 விழியும் நீர் சிந்தி என்பாவம் கழுவினீர் - 2 சருகாகக் காயும் என்னை சந்திக்க வருவாயா - 2 விறகாகக் வாடும் என்னை விழுதாக மாற்றுவாயா - 2 பயணத்தின் துணையாகி பாதைகள் காட்டுமே யேசு தேவா.வாருமையா..(2) உறவெல்லாம் பிரிந்தாலும் உனைமட்டும் நாடினேன் -2 கனவிலும் நானுந்தன் மடியிலே தூங்கினேன் -2 விழிகளில் உனைவாங்கி இதயத்தில் ஏந்தினேனே -2 மொழிகளும் மௌனமாக விழிகளில் பேசினேனே -2 மௌனங்கள் கொல்லுதே ஆசையாய் பேசுமே யேசு தேவா.வாருமையா..(2) |