நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1230-எம் நடுவே வீற்றிருக்கும் |
எம் நடுவே வீற்றிருக்கும் நற்கருணை நாதரே 2 என் வாழ்வில் வாருமே துணையாக வாருமே என்குடும்பம் என்கண்ணீர் உன்பாதம் வைக்கிறேன் மனப்பாரம் சுமைகளெல்லாம் தீர்த்திடவே துடிக்கிறேன் 2 வேதனையில் பரிதவித்து சோர்வுடனே நிற்கிறேன் - 2 வருவாய் .. ..துணையாய் .. ..நற்கருணை நாதரே உடைந்து போன உள்ளத்தோடு நொறுங்கி நானும் வருகிறேன் கசந்து போன உணர்வோடு நொந்தழுது நிற்கிறேன் மனந்திறந்து நீ பேச உரிமையோடு கேட்கிறேன் - 2 வருவாய் ....துணையாய் .....நற்கருணை நாதரே உடல் உள்ள நோய்களினால் அவதியுற்று உழல்கிறேன் ஏளனமாய் வெறுக்காமல் குழந்தை வரம் கேட்கிறேன் தனிமையிலே வெறுமையிலே அனாதையாய் நிற்கிறேன் - 2 வருவாய் .....துணையாய் .....நற்கருணை நாதரே ஆறாத காயங்கள் தீராமல் தவிக்கிறேன் போராடும் இவ்வுலகில் அமைதி தேடி அலைகின்றேன் வேலையிலே சுமைகளோடு தள்ளாடி சோர்கிறேன் - 2 வருவாய் .....துணையாய் .....நற்கருணை நாதரே |