Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1228-எமைப் படைத்த தந்தையே  
எமைப் படைத்த தந்தையே போற்றி போற்றி
மண்ணில் வந்த மைந்தனே போற்றி போற்றி
ஆற்றல் மிக்க ஆவியே போற்றி போற்றி
மூவொரு இறைவா போற்றி போற்றி போற்றி
தந்தையே போற்றி மைந்தனே போற்றி ஆவியே போற்றி
மூவொரு இறைவா போற்றி போற்றி போற்றி

தந்தையே உம்மை போற்றுகின்றோம் போற்றி போற்றி
தரணியைத் தந்தாய் எமக்காக போற்றி போற்றி
தனயனை உலகிற்கு அளித்தவனே போற்றி போற்றி
தீபத்தால் உம்புகழ் பாடுகின்றோம் போற்றி போற்றி
தந்தையே போற்றி....

இயேசுவே உம்மை போற்றுகின்றோம் போற்றி போற்றி
இத்தரை வாழ்வு தனையளித்தாய் போற்றி போற்றி
இதயம் நிறைந்த இறைமகனே போற்றி போற்றி
மலர்களால் உம்புகழ் பாடுகின்றோம் போற்றி போற்றி
தந்தையே போற்றி....

ஆவியே உம்மை போற்றுகின்றோம் போற்றி போற்றி
அமைதியை அளித்துக் காப்பவனே போற்றி போற்றி
அன்பால் ஆளும் தூயவனே போற்றி போற்றி
தூபத்தால் உம்புகழ் பாடுகின்றோம் போற்றி போற்றி
தந்தையே போற்றி....

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!