நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1227-என்னோடு தங்கும் ஆண்டவரே |
என்னோடு தங்கும் ஆண்டவரே - 2 மண்ணாக வாழும் நான் விண்சேரவே என்னோடு தங்கிடுமே - 2 (2) நான் போகும் பாதையில் நாதா உன் துணை கேட்கின்றேன் (2) நீரெந்தன் ஒளியாக நிறைகின்ற போது நின் சித்தம் என்னில் நிறைவேறுமே என் உள்ளம் உன் இல்லமாய் என்றுமே ஆகிடுமே வேதனை சோதனையில் சுமை தாங்க உனைக் கேட்கின்றேன் (2) இருள் என்ன இடர் என்ன என்னோடு நீர் தங்க இதயத்தின் மகிழ்வாக எனில் வாருமே என்னுள்ளம் மகிழ்ந்திடுமே என்றுமே மகிழ்ந்திடுமே |