நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1225-உன்னை நான் புகழ்ந்திட |
உன்னை நான் புகழ்ந்திட ஒரு வரம் வேண்டினேன் உன்னை அன்பு செய்திட உன்னருள் தேடினேன் உன் நாமம் பாடிடவும் உனக்காக வாழ்ந்திடவும் உன் அன்புத்துணையினை நான் தினமும் நாடினேன் - 2 உனையன்றி எனக்கொரு வேறொரு தலைவன் உண்டோ? நீயின்றி என் இதயம் நிறைவினை அடைவதுண்டோ? 2 கார் முகிலாய் என் வாழ்வில் கருணை மழை பொழிபவனே கனவிலும் நான் உனைப்பிரியா வரமொன்று தாருமையா பாசத்தின் கண்கொண்டு பாவியை பார்க்கையிலே பாவச் சுமை உன் கண்களுக்குப் பாரமாய் தெரிவதில்லை 2 உன் கையில் எனைப் பொறித்தாய் உன் தோளில் எனைச் சுமந்தாய் உன் அருளின்றிப் பதிலன்பு செய்ய எனக்கேது திறனய்யா? |