நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | 1222-உன்புகழைப் பாடுவது |
உன் புகழைப் பாடுவது - என் வாழ்வின் இன்பமையா உன் அருளைப் போற்றுவது - என் வாழ்வின் செல்வமையா துன்பத்திலும் இன்பத்திலும் - நல் தந்தையாய் நீ இருப்பாய் கண்ணயரக் காத்திருக்கும் - நல் அன்னையாய் அருகிருப்பாய் அன்பு என்னும் அமுதத்தினை - நான் அருந்திட எனக்களிப்பாய் உன்னின்று பிரியாமல் - நீ என்றும் அணைத்திருப்பாய் - 2 (உன்) பல்லுயிரைப் படைத்திருப்பாய் என்னையும் ஏன் படைத்தாய் பாவத்திலே வாழ்ந்திருந்தும் - நீ என்னையும் ஏன் அழைத்தாய் - 2 அன்பினிற்கு அடைக்குந் தாழ் - ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2 (நான்) |