Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1221-உன் நினைவே என்னை  

உன் நினைவே என்னை ஆளுதையா
என் வாழ்வின் கலையாய் தோணுதையா

நாளும் பொழுதும் உன் நினைவே
நூதன் என்றால் என் மகிழ்வே
ஆளும் என்னை ஆண்டவனே
அருகில் இருக்க மறவாதீர்

காலையும் மாலையும் உம் மொழிகள்
காதில் ஒலித்தால் ஆனந்தமே
வாழ்வும் வழியும் ஆனவரே
வளர்வாய் வார்த்தையாய் நெஞ்சினிலே

காலையில் எழுந்திடு உன் நினைவே
மாலையில் ஓய்விலும் உன் நினைவே
நினைவில் நீயாய் நிலைத்திருந்தால்
மனதில் மகிழ்வு நிலைத்திடுமே

நீரே என்னில் நிறைந்து விட்டாய்
யார் என்னை அசைத்திடுவர்
தேவா உம்மில் நிலைத்திருந்தால்
பாவம் என்னை என்ன செய்யும்


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!