Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் 1220-உறவோடு வாழும் உள்ளங்கள்  
உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்
உலகாழும் தேவன் நெறி வாழும் இதயம் தெய்வம் தரிசனம்
மறை வழியில் வளரும் தெய்வங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்
நிறைவோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

மதம் யாவும் மனித இனபேதம் ஒழித்தால் தெய்வம் தரிசனம்
சம தர்மம் ஓங்க ஓயாது உழைத்தால் தெய்வம் தரிசனம்
உரிமைகள் காக்;க உயிர்த்தியாகம் செய்தால் தெய்வம் தரிசனம்
இறையரசின் கனவு நனவாகி விடிந்தால் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில் தெய்வம் தரிசனம்
மெய்யாகி பொய்மையைப் பழிநீக்கும் நெறியில் தெய்வம் தரிசனம்
ஒளியாகி உலகில் இருள் போக்கும் பணியில் தெய்வம் தரிசனம்
தணலாகி நீதி நெருப்பாகும் செயலில் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் தெய்வம் தரிசனம் - 2

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!